சீக்கியம் (ਸਿੱਖੀ, Sikhism) அல்லது சீக் (சீக்கியர், என்ற சொலுக்கு “சீடர்”, அல்லது “கற்பவர்” என்று பொருள்படும்[1][2]) என்பது இந்தியத் துணைக் கண்டத்தின் பஞ்சாப் பகுதியில் பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டின் முடிவில் தோன்றிய தர்ம சமயமாகும்.[3][4] உலகில் உள்ள முதன்மை சமயங்களில் இளைய சமயங்களில் இதுவும் ஒன்றாகும். சீக்கிய சமயத்தின் அடிப்படையான நம்பிக்கைகள், குரு கிரந்த் சாஹிப் நூலில் உள்ளன, மனிதகுலத்தின் ஒற்றுமை, தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவது, அனைவரின் நலனுக்கும் சமூக நீதிக்காக போராடுவது, மற்றும் நேர்மையான நடத்தை ஆகியவற்றை பொதுவாக வலியுறுத்துகிறது.[5][6][7] இது ஓரிறைக் கொள்கையை உடைய சமயமாக பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த குரு நானக் அவர்களால் 15ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சமயமாகும்.[8] இச்சமயம் குரு நானக்கிற்குப் பிறகு தோன்றிய பத்து சீக்கிய குருக்களாலும் முன்னேற்றப்பட்டது. இது சுமார் 30 மில்லியன் சீக்கியர்களைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய சமயமாக உள்ளது.[9][10] முதல் நான்கு மதங்களாக முறையே கிறித்தவம், இசுலாம், இந்து, பௌத்தம் போன்ற மதங்கள் இருக்கின்றன.
சீக்கிய சமயம் சிம்ரனை (குரு கிரந்த சாகிப்பின் வார்த்தைகளில் தியானம்) வலியுறுத்துகிறது, இது கீர்த்தனையோ அல்லது உள்மனதில் உச்சாடனை (கடவுளுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லுதல்) செய்வதன் மூலம் கடவுளுடைய பிரசன்னத்தை உணரும் வழிமுறை என்கிறது, மேலும் “ஐந்து திருடர்களான” (காமம், ஆத்திரம், பேராசை, பற்று, அகந்தை) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, மதச்சார்பற்ற வாழ்க்கையை ஆன்மீக வாழ்வோடு கை கோர்த்து பிணைக்கப்பட வேண்டும் என்கிறது.[11] குரு நானக் கற்பித்தவை “செயலில், ஆக்கபூர்வமான, நடைமுறை வாழ்க்கை” அதில் “உண்மை, விசுவாசம், சுய கட்டுப்பாடு தூய்மை” மேலும் சிறந்த மனிதர் என்பவர் “கடவுளோடு ஒன்றிணைந்து, அவருடைய விருப்பத்தை அறிந்து, அதைத் தொடருவார்” என்று கூறுகிறார்.[12
குரு நானக் தேவ் மற்றும் அவரது வழித்தோன்றல்களின் போதனைகளே சீக்கிய சமயத்தின் மூலமாகும். சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தனது 30ம் வயதில் அறிவு விளக்கம் பெற்ற பிறகு, யாருடைய பாதையை நான் பின்பற்ற வேண்டும் இந்து மதமா அல்லது முஸ்லீமா, நான் கடவுளின் பாதையை பின்பற்ற வேண்டும். கடவுள் இந்து மதமும் அல்ல முஸ்லிம் மதமும் அல்ல, நான் பின்பற்ற வேண்டிய பாதை கடவுளின் பாதையாகும் என்று மக்களிடையே கூறினார். பின் அவர் தன் கருத்துகளை பயணங்கள் செய்து மக்களிடையே கொண்டு சேர்த்தார். இவருக்குப் பின் தோன்றிய சீக்கிய குருக்கள் சீக்கியத்தினை மேம்படுத்தினர்.
சீக்கியம் அனைத்து மனிதர்களும் சமத்துவமானவர்கள் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது. அத்துடன் சாதி, சமயம், பாலினம் போன்ற பாகுபாடுகளை நிராகரித்து இறைவனை அடைவதற்கான வழிமுறைகளைக் கூறுகிறது.
குரு என்ற சொல்லானது சமஸ்கிருதத்தின் குரு என்ற சொல்லிருந்து தோன்றியதாகும். இச்சொல்லானது ஆசிரியர், வழிகாட்டுனர் மற்றும் அறிவுரையாளர் என்று பொருள்தருவதாகும். பொ.ஊ. 1469 முதல் 1708 வரையில் சீக்கியத்தின் மரபுகள் மற்றும் தத்துவங்கள் பத்து குருக்களால் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு குருவும் சீக்கிய மதத்தின் கோட்பாடுகளினை வரையரை செய்து அதன் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தனர். சீக்கிய சமயத்தினை தோற்றுவித்த குரு நானக் முதல் குருவாவர். அவருக்குப்பின் ஒன்பது குருக்கள் தோன்றினர். பத்தாவது குருவான கோவிந்த சிங் தனக்குப் பின் குருவாக சீக்கிய குருக்களின் போதனைகளை எழுத்துவடிவமாக தொகுக்கப்பட்ட நூலினை அறிவித்தார். அதனால் குரு கிரந்த் சாகிப் என்று அழைக்கப்படும் அந்நூலானது பதினோராவது குருவாக சீக்கியர்களால் மதிக்கப்படுகிறது. இந்நூல் சீக்கியர்களுக்கான ஆன்மீக வழிகாட்டியாக வேதா வாக்காக, தனித்துவமான குருவின் நேரடி உருவகமாக மாறியது.[13][14][15]
குருநானக் முதல் குரு கிரந்த சாகிப் வரையான சீக்கியகுருக்களின் பட்டியல்:[16]
- குரு நானக் சாகிப்
- குரு அங்கட் சாகிப்
- குரு அமர் தாஸ் சாகிப்
- குரு ராம் தாஸ் சாகிப்
- குரு அர்ஜூன் சாகிப்
- குரு அர்கோவிந்த் சாகிப்
- குரு ஹர் ராய் சாகிப்
- குரு ஹர் கிருஷ்ணன் சாகிப்
- குரு தேக் பகதூர் சாகிப்
- குரு கோபிந்த் சிங் சாகிப்
- குரு கிரந்த சாகிப்
சீக்கிய சமயத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் 1699 -ஆம் ஆண்டில், பைசக்தி நாளில் அமிரித் சன்ஸ்கரில், எல்லா தீட்சைப் பெற்ற சீக்கியர்களும் (கால்சா சீக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது) நம்பிக்கையின் அடையாளமாக ஐந்து பொருட்களை எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார். இதை “ஐந்து கே” க்கள், அல்லது “பஞ்ச காக்கர்/காக்கி” என்று சொல்கிறார்கள்.இந்த ஐந்து சின்னங்களாவன
1. கேஷ் (வெட்டப்படாத முடி, இதை பொதுவாக சுருட்டி சீக்கிய தலைப்பாகையான, டாஸ்டர் என்பதன் உள்ளே வைக்கப்படும்.) 2. கங்கா (மரத்தாலான சீப்பு, பொதுவாக தலைப்பாகையின் கீழ் அணியப்படும்.) 3. கச்சாஹெரா (இடுப்பிலிருந்து முட்டிவரை இருக்கும் ஆடை, வெள்ளை நிறத்திலிருப்பது.) 4. கடா (இரும்பாலானா கைவளையம், இது வெண்கல கைவாளாக போரில் பயன்படக்கூடியது, பெரியவை தலைப்பாகையில் அணியப்பட்டு தூக்கியெறியக்கூடிய ஆயுதமாக பயன்படுத்தப்படும்.) 5. கிர்ப்பான் (வளைந்த கத்தி)
சாகிப்தா சோரவார் சிங் (Zorawar Singh ) (பிறப்பு:28 நவம்பர் 1695 – இறப்பு 26 டிசம்பர் 1705) சீக்கிய சமயத்தின் பத்தாவது மற்றும் இறுதி குருவான குரு கோவிந்த் சிங்கின் நான்கு பிள்ளைகளில் மூன்றாமவர் ஆவார். சீக்கிய சமயத்தில் சோரவார் சிங்கும் அவரது இளைய சகோதரர் பதே சிங்கும் மிகவும் புனிதமான தியாகிகள் என்ற புகழைப் பெற்றவர்கள். சீக்கியர்கள் இவரது பெயருக்கு முன்னாள் சாகிப்சதா (இளவரசன்) இட்டு அழைப்பர்.
மே 1705-இல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் ஆனையின் படி, சீக்கியர்களின் அனந்த்பூர் சாஹிப் நகரம் பல மாதங்களாக முற்றுகை இடப்பட்டது. பல மாதங்கள் சீக்கியர்கள் தாக்குதல்களையும் முற்றுகைகளையும் தாங்கினர், ஆனால் இறுதியில் நகரத்தில் உணவு இருப்பு தீர்ந்துவிட்டது. சீக்கியர்கள் ஆனந்த்பூரை விட்டு வெளியேறினால், முகலாயர்கள் பாதுகாப்பான வெளியேற்றத்தை வழங்குவதாக கூறினர். அதனை குரு கோவிந்த் சிங் சம்மதித்து, தனது குடும்பத்தினருடனும் ஒரு சிறிய குழுவினருடனும் நகரத்தை காலி செய்தார். குரு கோவிந்த் சிங்கின் தாயான மாதா குஜாரி, தனது இரண்டு பேரன்களான சோரவார் சிங், பதே சிங் மற்றும் குடும்ப வேலைக்காரர் கங்குவை உடன் அழைத்துக் கொண்டு தனது சொந்த கிராமமான சஹேதிக்கு சென்று கொண்டிருந்தார். முகலாயர்களால் லஞ்சம் பெற்ற வேலைக்காரர் கங்கு, குரு கோவிந்த் சிங்கின் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்களையும் சிர்இந்த்-பதேகர் என்ற இடத்தின் நவாப் வசீர் கான் முன்னிலையில் அழைத்துச் சென்றார்.
குரு கோவிந்த் சிங்கின் இரண்டு மகன்களான பதே சிங் (வயது 6) மற்றும் சோரவார் சிங் (வயது 10) இசுலாமிய சமயத்திற்கு மதம் மாறினால் உயிருடன் விட்டுவிடுவதாக நவாப் வசீர் கான் கூறினார். ஆனால் இரண்டு சிறுவர்களும் இசுலாம் சமயத்திற்கு மதம் மாற மறுத்தனர். வசீர் கான் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். குழந்தைகள் இருவரையும் உயிருடன் வைத்து செங்கல் சுவரை எழுப்பி மூடி கொல்லப்பட்டனர்.[1] பதேசிங் குருத்துவார் கோயிலில் இக்குழந்தைகள் உயிருடன் கொல்லப்பட்ட செங்கல் சுவர் அடையாளம் இன்றும் காணப்படுகிறது.
குரு கோவிந்த் சிங்கின் மறைவிற்குப் பின்னர் கால்சா சீக்கிய இராணுவத்தில் பணியாற்றிய பண்டா சிங் பகதூர் என்பவர் இரண்டு சீக்கிய குழந்தைகளை உயிருடன் கொன்ற வசீர் கானை சிர்இந்த்-பதேகர் போரில் தலையை துண்டித்துக் கொன்றார்.[2
Thanks wikipedia